பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு: வெளியான காரணம்

Sri Lanka Army University of Colombo University of Kelaniya University of Sri Jayawardenapura Sri Lanka
By Fathima May 22, 2023 06:24 AM GMT
Fathima

Fathima

கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களது கோரிக்கையை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு: வெளியான காரணம் | Strengthened Security Near Universities

பாதுகாப்பு நிலைமைகள்

அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது துணைவேந்தர்கள் இதற்கான கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்களின் போது, பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.