அம்பாறையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் விபரீத செயல்!
Ampara
Sri Lankan Peoples
Eastern Province
Death
By Rakshana MA
அம்பாறை(Ampara) - பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (06) அதிகாலை 5.15 மணியளவில் பதியதலாவ பொலிஸ் நிலையத்திற்குள் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபரீத செயல்
உயிரிழந்தவர் பிபிலா பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |