பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை

Sri Lanka Food Crisis Sri Lankan Schools Education
By Fathima Sep 23, 2023 01:37 PM GMT
Fathima

Fathima

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதாக அதன் துணைத் தலைவர் கே.ஏ.பி பொரலஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் இருக்க வேண்டிய மற்றும் இருக்கக் கூடாத உணவுகள் குறித்து கடுமையான ஆய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சரின் அறிவிப்பு

அத்துடன், மாணவர்கள் மத்தியில் நோய்கள் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விதிமுறைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை | Steps To Tighten Regulation Of School Canteens

இந்நிலையில், கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.