குறுகிய காலத்தில் மஹாபொல உதவித்தொகையை வழங்க நடவடிக்கை!
Sri Lankan Peoples
Money
By Rakshana MA
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்குவதற்காகக் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இந்த வருடம் தாமதமான மஹாபொல உதவித்தொகையைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மஹாபொல உதவித்தொகை
அத்துடன் மஹாபொல உதவித்தொகையைப் பெறுவோரின் கணணி தரவுகளை நவீனமயப்படுத்துதல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவின் தலைமையில் நேற்று நடைபெற்றதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |