நியூயோர்க் நகரில் அவசர நிலை பிரகடனம்: புயல் மற்றும் திடீர் வெள்ளம்

United States of America Climate Change Weather
By Fathima Sep 30, 2023 03:36 PM GMT
Fathima

Fathima

கடுமையான புயல் மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நியூயோர்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நகரின் பல சுரங்கப்பாதை அமைப்புகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு முனையம் மூடப்பட்டதாகவும் வெளிநாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நியூயோர்க்கின் கவர்னர் மக்களை பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வெள்ளம் நிறைந்த வீதிகள் வழியாக வாகனம் ஓட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நியூயோர்க் நகரில் அவசர நிலை பிரகடனம்: புயல் மற்றும் திடீர் வெள்ளம் | State Of Emergency Declared In New York City

நியூயோர்க் நகரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொது போக்குவரத்து அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூயோர்க் நகரிலும், நியூ ஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.