LPL கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமை பெற்ற இந்திய ஊடகம்
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை புகழ்பெற்ற விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுக் கொண்டுள்ளது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளைக் கையாளும் புகழ் பெற்ற அமைப்பான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் ஒளிபரப்பு உரிமையைப் பெற்ற முதல் முறை இதுவாகும்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போட்டி இயக்குனர் சமந்த தொடன்வெல, லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் மற்றும் இரசிகர்கள் காட்டும் ஆர்வத்தின் அடிப்படையில் மிக உயர்ந்த நிலைக்கு செல்லும் என்று நான் நம்புகிறேன்.
எனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற புகழ்பெற்ற ஒளிபரப்பு நிறுவனம் இப் போட்டியை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் எனத் தெரிவித்தார்.
லங்கா பிரீமியர் லீக் தொடர்
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், தம்புள்ளை ஆரா, கோல் டைட்டன்ஸ், யாழ் கிங்ஸ் மற்றும் கண்டி பி லவ் ஆகிய 5 அணிகள் பங்கேற்க உள்ளன.
அதன்படி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சிலோன் பிரீமியர் லீக்கை, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைத்தீவுகள் மற்றும் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய மேற்கு நாடுகளில் ஒளிபரப்பவுள்ளது.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் லங்கா பிரீமியர் லீக் போட்டியுடன் இணைந்திருப்பது போட்டியின் பலத்தை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.