அம்பலாங்கொடையில் ஒருவர் குத்தி கொலை : விமான நிலையத்தில் கைது!
Colombo
Sri Lanka
By Nafeel
அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் ஒன்றாக உணவருந்திய பின்னர் தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்காக இரண்டு நாட்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து,
சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாமல் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொட ஹிரேவத்தையைச் சேர்ந்த ஆர்.ஜே.ரொஷான் குமார என்ற 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சந்தேக நபரால் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.