காற்றாலை திட்டம் தொடர்பில் அதானி உறுதி: காஞ்சன விஜேசேகர

Ranil Wickremesinghe India Minister of Energy and Power Kanchana Wijesekera
By Fathima Jul 22, 2023 09:10 AM GMT
Fathima

Fathima

மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் சூரிய சக்தி மற்றும் காற்றாலை திட்டத்தை 2025 ஜனவரிக்குள் முடிக்க கௌதம் அதானி உறுதியளித்துள்ளார் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவுடனான சந்திப்பின் போது அதானி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அமைச்சர்  இன்று (22.07.2023) கூறியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

காற்றாலை திட்டம் தொடர்பில் அதானி உறுதி: காஞ்சன விஜேசேகர | Srilankan Solar And Wind Power Gautam Adhani

இந்த விஜயத்தின் போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய வெப்ப சக்தி கூட்டடுத்தாபனத்தின் கூட்டு முயற்சியில் சம்பூர் சூரிய சக்தி பூங்காவிற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.