கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற அம்பாறை இளைஞர் தெரிவு!

Cricket Sri Lanka Sri Lankan Peoples Qatar
By Rakshana MA Apr 03, 2025 12:52 PM GMT
Rakshana MA

Rakshana MA

கத்தார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் வயது குறைந்த நடுவராக, இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் தெரிவு செய்யபட்டுள்ளார்.

கத்தார் Asian Town சர்வதேச cricket மைதானதில் இரவு போட்டியாக இடம்பெற்ற இத்தொடரில் கட்டார் கிரிக்கெட் சபையில் பதிவு செய்யப்பட்ட 14, மிக பலம் பொருந்திய முன்னணி (Premium club) கழகங்கள் போட்டியிட்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி இருந்தனர்.

மேலும், குறித்த தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நாட்டினை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்தோடு இந்த தொடரில் மொத்தமாக 49 போட்டிகளுக்காக 22 சிறந்த நடுவர்கள் (Umpires) கடமையாற்றியுள்ளனர்.

ஆதம்பாவா எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!

ஆதம்பாவா எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!

வயது குறைந்த நடுவர்

இவர்கள் india, pakistan, srilanka மற்றும் பங்களாதேஷ் நாட்டினை பிரதி நிதித்துவப்படுத்தி கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

அத்தோடு இவர் சிறப்பான முடிவுகளையும், சிறந்த தீர்ப்புகளையும் வழங்கியதன் காரணத்தால் league போட்டிகள், காலிருத்திப் போட்டிகள், அரையிருத்திப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிகளுக்குமான மிக முக்கியமான போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன.

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற அம்பாறை இளைஞர் தெரிவு! | Srilankan Selected As Youngest Umpire By Qatar

இத் தொடருக்கு கட்டார் நாட்டின் பிரபல நிறுவங்கள் அனுசரணை பிரதான அனுசரணை வழங்கி இருந்த நிலையில், குறித்த போட்டிக்கு பிரதம அதிதியாக qatar cricket board செயலாளர் உள்ளிட்ட மிக முக்கிய அதிதிகள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்துள்ளனர்.

இவர் கத்தார் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படுகின்ற டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள், பல்கலைக்கழங்களுக்கு இடையிலான போட்டிகள், பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள், மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் தனது திறமையினால் குறிப்பிட்ட வருடங்களுக்குள் மிக சிறப்பான முறையில் நடுவராக கடமையாற்றி வருகின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தில் மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியத்தில் மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

கிரிக்கெட் போட்டி 

அத்துடன், கத்தார் கிரிக்கெட் சபையில் கிட்டத்தட்ட 150 மேற்பட்ட நடுவர்கள் காணப்படுகின்றனர். மேலும் இவர் இன்னும் சில மாதங்களில் கத்தார் கிரிக்கெட் சபை சார்பாக ICC யினால் நடாத்தப்பட இருக்கின்ற தரம் -2 பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும், இவர் இலங்கை கிரிக்கெட் காட்டுப்பாட்டு சபையின் தரம் - 4 நிலை நடுவராகவும், இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தரம் 2ஆம் நிலை நடுவராகவும் கடமையாற்றுகின்றார்.

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற அம்பாறை இளைஞர் தெரிவு! | Srilankan Selected As Youngest Umpire By Qatar

இவர் கடந்த வருடம் நடை பெற்ற தரம் 3 நடுவர்களுக்கான பரீட்சையில் தன்னுடைய வெளிநாட்டு பயணம் காரணமாக தோற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர் தற்போது கத்தார் நாட்டில் pro divison கிரிக்கெட் நடுவராக இலங்கை நாட்டின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட ஒரே இளம் வயதுடைய நடுவர் என்பதும் விசேட அம்சமாகும்.

மேலும் இவர் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நற்பிட்டிமுனை NCC விளையாட்டு கழகத்தின் தலைவரும், தற்போது கத்தார் நாட்டில் சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார் என்பதோடு இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் அதிரடியாக கைது

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அருண் அதிரடியாக கைது

சைபர் தாக்குதல் தொடர்பில் கார்கில்ஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

சைபர் தாக்குதல் தொடர்பில் கார்கில்ஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery