ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள் வெளியேற்றம்: சிக்கலில் நிறுவனம்

SriLankan Airlines Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Fathima Sep 14, 2023 08:33 AM GMT
Fathima

Fathima

கடந்த 12 மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து 60 விமானிகள் வெளியேறியுள்ளனர்.

இந்த வெளியேற்றம், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஏற்கனவே அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்துள்ளார்.

நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் இருந்து, அண்மைய தேசிய பொருளாதார சவால்களுக்கு பின்னர், விமானிகளும் கணிசமான அளவில் வெளியேறியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள் வெளியேற்றம்: சிக்கலில் நிறுவனம் | Srilankan Airlines Pilots Leave Country

இந்த ஆண்டு விமான நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 30 விமானிகள் தேவைப்படுவதாகவும், அடுத்த ஆண்டு மத்தியில் மேலும் 50 விமானிகள் தேவைப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிறுவனத்திற்குள் உள்ள விமானி பணியாளர்களின் கூற்றுப்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது 143 விமானிகள் , 53 முதல் அதிகாரிகள் மற்றும் 26 கடைநிலை முதல் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் இயங்குகிறது.