விமான நிலையங்களுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது.
விமான நிலையங்களுக்கு செல்ல முன்னர் சமீபத்திய விமான நிலையைச் சரிபார்க்குமாறு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
கோரிக்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விமானத் தகவலுக்கு www.srilankan.com இல் விமான நிலையைச் சரிபார்க்கவும் அல்லது 1979 (இலங்கைக்குள்) அல்லது +94 117 77 1979 (சர்வதேசம்) என்ற எண்ணை அழைக்கவும்.
உங்கள் பாதுகாப்பும் ஆறுதலும் எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். கவனமாக இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.