அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் - வெளியான காரணம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL 173 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெங்களூர் நோக்கி நேற்று (19.3.2024) அதிகாலை பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL 173 என்ற விமானம் நேற்று அதிகாலை 1.10 அளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
எனினும் விமானத்தின் சமநிலையை பராமரிக்கும் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்களின் பின்னர் அது கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் 85 பேர் பயணித்துள்ளனர். பின்னர் ஏனைய மாற்று விமானங்களின் ஊடாக குறித்த 85 பேரும் பெங்களூர் நோக்கி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.