வானிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Ampara Batticaloa Puttalam Trincomalee Weather
By Fathima Dec 30, 2025 01:49 PM GMT
Fathima

Fathima

வடக்கு,கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஏனைய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Srilanka Weather Report Update

மேலும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். வடக்கு, வடகிழக்கு பகுதிகளில் பத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது

புத்தளம் முதல் கொழும்பு வழியாக காலி வரை கடல் கொந்தளிப்பாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.