வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு!

Sri Lanka Tourism Department of Immigration & Emigration
By Fathima Aug 30, 2023 10:27 PM GMT
Fathima

Fathima

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசா முறைமையை இலகுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் மற்றும் அதன் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வருகை விசா, வதிவிட விசா மற்றும் போக்குவரத்து வீசா என மூன்று வகையான விசாக்களை வழங்குகிறது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு 

இதற்கமைய, வருகை விசா மற்றும் வதிவிட விசா ஆகிய இரண்டு வகையான விசாக்களின் கீழ் வழங்கப்படும் விசா வகைகளில் தற்போதுள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, விசா முறையை மறுஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள விசா முறையை எளிமையாக்கும் வகையில் பொது பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள வீசா முறைமைகளை கருத்திற்கொண்டு இந்த நாட்டில் வீசா முறைமையை மாற்றியமைக்க அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு! | Srilanka Visa Rules