வாகன இறக்குமதியின் பின்னணியில் சிக்கிய பெரும் மோசடி

Sri Lanka
By Fathima Aug 30, 2023 10:35 PM GMT

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் அதிக அளவில் வாகனங்கள் கடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் பலரால் இந்த கடத்தல் நடத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையில் சுமார் 5000 வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 200 வாகனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் 6 சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இந்த கடத்தல் சில காலமாக இடம்பெற்று வருவதாகவும் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

வாகன இறக்குமதியின் பின்னணியில் சிக்கிய பெரும் மோசடி | Srilanka Vehicle Import