பாரிய வங்கி கடனட்டை மோசடி: இலங்கை தபால் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கை தபால் திணைக்களத்தினை போன்ற போலி இணையத்தளத்தை பயன்படுத்தி பண மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது.
இவ்வாறான மோசடி ஈடுபடும் நபர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம். ஆர்.பி.குமார மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த பண மோசடிச் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வங்கி அட்டைகள்
இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு நிகரான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் வங்கி அட்டைகள் தொடர்பான தகவல்களை பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தபால் திணைக்களம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்துவதில்லை என வலியுறுத்தியுள்ளது.
தபால் திணைக்களத்தின் இணைய முகவரியும் மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.