திடீர் எரிபொருள் விலை அதிகரிப்பு! வெளியான விலை விபரங்கள்

Ceylon Petroleum Corporation Sri Lanka Economic Crisis Lanka IOC Petrol diesel price
By Fathima Oct 02, 2023 04:39 AM GMT
Fathima

Fathima

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை அதிகரிப்பு

இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

திடீர் எரிபொருள் விலை அதிகரிப்பு! வெளியான விலை விபரங்கள் | Srilanka Petrol Price Inceacing

ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீட்டர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

நேற்று (01.10.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.

திடீர் எரிபொருள் விலை அதிகரிப்பு! வெளியான விலை விபரங்கள் | Srilanka Petrol Price Inceacing

அதன்படி, பெட்ரோல் 92 லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் 95 ஒக்ரெய்ன் லீட்டருக்கு 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 351 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீட்டருக்கு 62 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 321 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 242 ரூபாவாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சினோபெக்

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. சினோபெக் நிறுவனம் நேற்று (01.10.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

திடீர் எரிபொருள் விலை அதிகரிப்பு! வெளியான விலை விபரங்கள் | Srilanka Petrol Price Inceacing

இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 348 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 417 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

எனினும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW