கலப்படம் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்வனவு தொடர்பில் எச்சரிக்கை
பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிக்க வழியேற்படுத்தி வருவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையில், தேங்காய் விலை உயர்ந்தாலும், தேங்காய் எண்ணெய் விநியோகத்தில் உள்ள திறமை காரணமாக சந்தையில் நியாயமான விலைக்கு விற்கப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
எனினும் சந்தைக்கான விநியோகத்தை சீர்குலைத்து செயற்கையான தட்டுப்பாட்டை
ஏற்படுத்தி தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதே இந்த குழுவின் நோக்கமாகும்
என்று சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நாட்டில் உள்ள நுகர்வோர் அதிக விலைக்கு தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்ய வேண்டி வரும் என்பதுடன், கலப்படம் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யையும் கொள்வனவு செய்ய நேரிடும் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் எச்சரித்துள்ளது.