மாணவர்களின் பாடசாலை அனுமதி குறித்து வெளியாகும் புதிய சுற்றறிக்கை
தரம் 1 மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கைகளுக்கு மாற்றாக, புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கைகள் வெளியிடப்பட உள்ளதாக கல்வித் துணை அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார்.
அதற்கமைய, தரம் 1 மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றறிக்கை இன்று (30) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கை
தற்போதைய நடைமுறையின் கீழ், ஒரு வகுப்பில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச மாணவர் எண்ணிக்கையை விட அதிகமாக மாணவர்கள் சேர்க்கும் சட்டபூர்வ அனுமதி இல்லாத போதிலும், 2024ஆம் ஆண்டு 555 மாணவர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கோரிக்கைகள் பெரும்பாலனவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வகுப்பொன்றில் அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை மீறி சேர்க்கும் நடைமுறையைத் இடையூறு செய்கின்றது.
இதன் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான அளவுகோல்களின் அடிப்படையில் இடைநிலை வகுப்புகளில் சேர்க்கை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மற்றும் முறையற்ற முறைகளின் வாயிலாக மாணவர்கள் சேர்க்கப்படுவதை முற்றிலுமாக நிறுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது
இந்த புதிய நடவடிக்கைகள், கல்வி முறைமையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அமைதி, சமத்துவம் மற்றும் சட்டப் பேருரிமையின் அடிப்படையில் கல்வி வாய்ப்புகளை வழங்கும் எண்ணத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |