மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

Batticaloa Eastern Province Crime Local government election Sri Lanka 2025
By Rakshana MA May 06, 2025 11:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டத்தில் இன்றைய தினத்தில்(06) மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும், வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன்(JJ.Muralitharan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேலுள்ளவாறு கூறியுள்ளார்.

தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

அமைதியான முறையில் வாக்களிப்பு

தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பின் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற தேர்தலில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடனும் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்கள் பதிவு | Srilanka Local Government Election 2025

வாக்களிப்பு நேரம் முடிவடைந்த பின் பொதுமக்கள் மிகவும் அமைதியான முறையில் வீடுகளில் தங்கி இருக்க வேண்டும்.

பிற்பகல் 4.30 மணிக்கு பிறகு 144 தெரிவு செய்யப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் அதன் பின்பு பொதுமக்களின் வட்டார வாக்குகளும் எண்ணப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை

அம்பாறையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் விபரீத செயல்!

அம்பாறையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் விபரீத செயல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW