எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக நிவாரணம்

Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis
By Dhayani Feb 27, 2024 04:29 AM GMT
Dhayani

Dhayani

எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக எதிர்காலத்தில் நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகையை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பூஜ்ஜியத்திலிருந்து 4 சதவீதம் வரையான ஈவுத்தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில் விலை சூத்திரத்தை செயல்படுத்த நாங்கள் எதிர்ப்பார்த்துள்ளோம்.

எரிபொருள் விலை சூத்திரத்தின் ஊடாக நிவாரணம் | Srilanka Fuel Crisis

பெட்ரோலிய கூட்டுத்தாபனம், LIOC மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த 4% ஐப் பயன்படுத்த முயற்சிக்கிறோம். இவ்வளவு காலமாக எமக்கு இருந்த 4% சதவீதத்தை வைத்து கடந்த ஆண்டு விலைச்சூத்திரத்தின் ஊடாக பழைய கடன்களையும், வங்கிகளில் வாங்கிய கடன்களையும் ஈடுகட்ட முடிந்தது.

இதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம் என நம்புகின்றோம். ,தற்போது, அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி அறிவித்தல் அமைச்சினால் வௌியிடப்படுகிறது.

அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் LIOC பெரும்பாலும் அந்த அதிகபட்ச விலைக்கு செல்லக்கூடும். சினோபெக் மட்டும் அதை விட குறைவாக விற்கிறது.