நாடு முழுவதும் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Fathima
நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெட்ரோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெட்ரோல் கையிருப்புகளை உரிய முறையில் பராமரிக்காமையே இந்த நிலைக்கு காரணம் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.