அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க சதொச நிறுவனம் தீர்மானம்
லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, 400 கிராம் பால்மா பொதியின் முன்னைய விலை 950 ரூபாவாகவும், புதிய விலை 910 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை விபரம்
ஒரு கிலோ பச்சைப்பயிறு முன்னைய விலை 998 ரூபாவாகவும், புதிய விலை 965 ரூபா ஆகும்.
நெத்தலி ஒரு கிலோ முன்னைய விலை 978 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 950 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ முன்னைய விலை 305 ரூபாவாகவும், புதிய விலை 285 ரூபாவாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ கடலையின் முன்னைய விலை 455 ரூபாவாகவும், புதிய விலை 444 ரூபா ஆகும்.
ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 263 ரூபாவாகவும், புதிய விலை 258 ரூபா ஆகும்.
அதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் முந்தைய விலை 204 ரூபாவாகவும், புதிய விலை 199 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 190 ரூபாவாகவும், புதிய விலை 185 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |