யானை தாக்கி உயிரிழந்த யுவதியின் காதலனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Badulla Sri Lanka Elephant
By Fathima Jun 05, 2023 09:42 PM GMT
Fathima

Fathima

கொஸ்லாந்தை - உடதியலும பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபரான காதலன் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 11 ஆம் திகதி உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இளம் ஜோடி தங்கியிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி 23 வயதான தருஷி கவீஷா என்ற யுவதி உயிரிழந்திருந்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 23 வயதான தனுஷ்க என்ற இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன், யுவதியின் மரணம் தொடர்பிலும் சாட்சியமளித்திருந்தார்.

யானை தாக்கி உயிரிழந்த யுவதியின் காதலனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Srilanka Elephant Attack Young Girl Death

சம்பவம் தொடர்பில் யுவதியின் காதலர் வழங்கிய முரண்பாடான வாக்குமூலங்கள் காரணமாக கொஸ்லாந்தை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.