இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் : வெளியான தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Rakshana MA May 29, 2025 03:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் பொருளாதாரம் 2018 இல் இருந்த நிலைக்குத் திரும்ப இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விடயத்தினை, இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

சாய்ந்தமருது சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டம்

இலங்கையின் பொருளாதாரம்

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு தொடர்பான விரிவுரை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் : வெளியான தகவல் | Srilanka Economy

இங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது, இதேவேளை முன்னைய ஆண்களுடன் ஒப்பிடும் போது தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி நிலை காணப்படுகிறது.

இருப்பினும் பழைய நிலைக்கு நாட்டின் பொருளாதாரம் திரும்புவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தேவைப்படும்.

மேலும், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

திருகோணமலைக்கு புதிய மேயர் தெரிவு

திருகோணமலைக்கு புதிய மேயர் தெரிவு

அதிபர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவித்தல்

அதிபர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவித்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW