ஐ.நா. சைபர் சாசனத்தில் கையெழுத்திட்டது இலங்கை

United Nations Sri Lanka Cyber Attack NPP Government
By Faarika Faizal Nov 03, 2025 11:40 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது.

குறித்த சாசனம், சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், இச் சாசனத்தில் இலங்கை சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண தனபால கையெழுத்திட்டார்.

அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

தேசிய ரீதியான நடவடிக்கை

இதன் மூலமாக தெற்காசிய நாடுகளில் குறித்த சாசனத்தில் கையொப்பமிடும் இரண்டாவது நாடாக இலங்கை உள்ளது.

ஐ.நா. சைபர் சாசனத்தில் கையெழுத்திட்டது இலங்கை | Sri Lankas Next Move Against Cybercrime

இச்சாசனத்தில் இணைந்து கொண்டதன் ஊடாக, ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட ஏனைய 72 உறுப்பு நாடுகளுடன் இலங்கை இணைந்து கொள்கின்றது.

அத்துடன், இலங்கையானது மூன்று மாதங்களுக்குள் சைபர் பாதுகாப்பை மையப்படுத்தியதாக அமைச்சுக்களுக்கு இடையேயான பொறிமுறையொன்றை ஆரம்பிக்கவுள்ளதோடு இதுவொரு தேசிய ரீதியான நடவடிக்கைகயின் மையப் புள்ளியாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

முதலமைச்சர் வேட்பாளராகக் எஸ்.எம்.மரிக்கார்

முதலமைச்சர் வேட்பாளராகக் எஸ்.எம்.மரிக்கார்

குச்சவெளி சபைத் தலைவர் முபாரக், அவரது பிரத்தியேக சாரதி ஆகியோருக்கு விளக்கமறியல்

குச்சவெளி சபைத் தலைவர் முபாரக், அவரது பிரத்தியேக சாரதி ஆகியோருக்கு விளக்கமறியல்

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW