வங்கிகளில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு! ரணில்

Fuel Price In Sri Lanka Sri Lankan rupee Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Mayuri Jul 28, 2024 10:45 AM GMT
Mayuri

Mayuri

வங்கிகளில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகளை வழங்கி வருகிறோம், அண்மையில் தங்க நகைகளுக்கான சலுகைகளை வழங்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

காலி நகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை ஏற்க எவரும் இல்லாத நிலையிலேயே எனக்கு வழங்கப்பட்டது. தெற்காசியாவில் முதல் முறையாக பிரதமர் பதவி யாசகம் செய்தது. நீங்கள் அடைந்த துயரங்களைக் கண்டுதான் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

வங்கிகளில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு! ரணில் | Sri Lankans Who Have Pawned Gold Jewelery In Banks

இரு வருடங்களில் மாற்றப்பட்ட நிலைமை

உரம், எரிபொருள், எரிவாயு, பாடசாலை செல்லவும் வழியிருக்கவில்லை. நாட்டை ஏற்று இரு வருடங்களில் அந்த நிலையை மாற்றிக் காட்டினேன். கஷ்டமான காலத்திலேயே நாட்டை ஏற்றேன். உணவு பெற்றுத்தந்தோம். உரத்தை பெற்றுத்தந்தோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவாவிடம் உதவிகோரினேன். உலக வங்கியிடம் உதவி கோரினேன். ஜப்பானிடம் உதவி கோரினேன். இவ்வாறுதான் பயணத்தை முன்னெடுத்தேன்.

உதவியைப் பெற்றுக்கொண்டுதான் இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுத்தேன் என கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW