இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கையர்கள்..!

Sri Lanka Sri Lankan Peoples Myanmar Crime Branch Criminal Investigation Department Crime
By Rakshana MA Nov 12, 2024 09:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையிலிருந்து(Sri Lanka) மியன்மாரிலுள்ள( Myanmar) இணைய குற்ற முகாம்களுக்கு ஆட்கள் அனுப்புவது அதிகரித்துள்ளது என தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்ட அறிக்கையொன்றிலே இது குறிப்பி்டப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் மக்கள், குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை பிரஜைகள், அதிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களை குறிவைத்து அதிக பணம் தரும் தொழில்களை சுட்டிக்காட்டி மனித கடத்தல் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

40 வருடங்களின் பின்னர் நன்றியுணர்வுக்காக ஒன்று கூடல்

40 வருடங்களின் பின்னர் நன்றியுணர்வுக்காக ஒன்று கூடல்

மீட்கப்பட்ட இலங்கையர்கள்

கடந்த காலங்களில் மியன்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் மியன்மாரில் மனித கடத்தலால் பாதிக்கப்பட்ட 20 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றங்களால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் கடந்த செப்டம்பர் 05 ஆம் திகதி பாதுகாப்பாக கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கையர்கள்..! | Sri Lankans Peoples Linked To Myanmar Cyber Crimes

மேலும் அமைச்சின் தொடர்ச்சியான முயற்சிகளால் மியன்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் உள்ள சட்ட நடைமுறைக்குட்பட்ட அதிகாரிகளின் நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன், இந்த இலங்கையர்கள் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட காங்கேசன்துறை கப்பல் சேவை

இடைநிறுத்தப்பட்ட காங்கேசன்துறை கப்பல் சேவை

போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இதற்கிடையில் வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக கூறி அழைத்துச்செல்லப்படுபவர்கள், துபாய் போன்ற இடங்களுக்கு நேர்காணலுக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இதன் பின்னர் அவர்கள் மியான்மாருக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற நடவடிக்கைகளில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கையர்கள்..! | Sri Lankans Peoples Linked To Myanmar Cyber Crimes

இந்த சைபர் கிரைம் முகாம்களில் உள்ளவர்கள், மன மற்றும் கொடூரமான உடல் சித்திரவதைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, வெளிநாட்டில் வேலை தேடும் போது மனித கடத்தல் கும்பல்களுக்கு பலியாக வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், அங்கீகரிக்கப்படாத வழிகளைத் தவிர்க்குமாறும் அமைச்சு பொதுமக்களுக்கு கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

இரகசியமாக பாதுகாக்கப்படும் முறைப்பாடுகள்

இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க 0112102570 மற்றும் 076 844 7700 எனும் அவசர தொலைபேசி இலக்கங்கள் பணிக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்துடன், nahttfsrilanka@gmail.com என்ற மின்னஞ்சலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கையர்கள்..! | Sri Lankans Peoples Linked To Myanmar Cyber Crimes

பொது மக்களால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் இரகசியமாக பேணப்படும் எனவும் பணிக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தற்போது மியன்மரின் மியாவாடி பகுதியில் 35 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளமையினால் அவர்களை விரைவாக மீட்டு திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய உரிய அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் விதிமுறைகளை மீறும் அரச அதிகாரிகள்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறும் அரச அதிகாரிகள்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வடக்கை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்கு அழைத்த ஜனாதிபதி!

வடக்கை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்கு அழைத்த ஜனாதிபதி!

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW