இலங்கை பெண்கள் தொடர்பான அவசர திட்டம்! மனுஷ வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் இருந்து பெண்களை வீட்டு பணிப் பெண்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு அதிக சம்பளம் பெறும் தொழில்களுக்கு பயிற்சி வழங்கி அனுப்ப வேண்டியது முக்கியம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்புகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யோசனைகள்
இதற்கமைய இலங்கை பெண்களை வீட்டு பணியாளர்கள் வௌிநாடுகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான முன்மொழிவையும் அவசர திட்டத்தையும் வழங்குமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் சங்கத்திடமும் அமைச்சர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் தொடர்பு கொண்டு யோசனைகளை தன்னிடம் சமர்பிக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.