மாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கை இராணுவப் படையினர்

World
By Harrish Jul 24, 2024 05:33 PM GMT
Harrish

Harrish

மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை ராணுவப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை ராணுவப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, 14, 524 மில்லியன் ரூபா வருமானத்துடன் மாலியிலிருந்து இலங்கை படையினர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் மாலியில் நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து இலங்கை ராணுவப் படையினர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அமைதி காக்கும் நடவடிக்கை

மாலி நாட்டில் அமைதி காக்கும் பணிகளுக்காக 1099 இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் 14 பணிநிலை அதிகாரிகளும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளின் கீழ் இயங்கி வந்த மாலியில் உள்ள பன்முக ஒருங்கிணைந்த ஸ்திரத்தன்மை நடவடிக்கை தலைமையகத்தின் இராணுவ போக்குவரத்துக் குழுவிற்காக இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கை இராணுவப் படையினர் | Sri Lankan Soldiers Have Returned From Mali

இந்த நிலையில், பணிகளை நிறைவு செய்யப்பட்டதையடுத்து இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

 மாலி அமைதி காக்கும் பணியின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய கேணல் பின்சர விக்ரம ஆராச்சியினால் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவிடம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய நாடுகளின் கொடி சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக அவர்கள் இலங்கைக்கு ஈட்டிய அந்நியச் செலாவணியின் அளவு 14524 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கை இராணுவப் படையினர் | Sri Lankan Soldiers Have Returned From Mali

இலங்கை இராணுவம் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இலங்கை படையணியின் கெப்டன் எச்.டபிள். யூடி ஜயவிக்ரம இயந்திரவியல் படையணியின் கோப்ரல் எஸ்.எஸ். விஜேகுமார மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கோப்ரல் எம்ஜிஎல் தேசபிரிய ஆகியோர் இலங்கை இராணுவ வாகனத் தொடரணியை இலக்கு வைத்து மேற்கொண்ட குண்டு தாக்குதல்களில் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

மேலும், மாலியில் ஐந்து இராணுவ அதிகாரிகள் மற்றும் 29 சிப்பாய்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery