அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
Ministry of Education
Sri Lankan Schools
Local government Election
schools
By Rakshana MA
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று(05) மற்றும் நாளை(06) நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு(Education Mininstry) தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள சகல பாடசாலைகளும் நேற்றையதினம் உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட விடுமுறை
இந்நிலையில், நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு கூறியுள்ளது.
அதேவேளை, அனைத்து அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |