இலங்கைக்கு வருகைத் தந்துள்ள 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள்
2025 ஏப்ரலில் மொத்தம் 174,608 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
இது மார்ச் 2024 இல் வந்த பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 17.3வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 896,884 ஆக உள்ளது.
பெரும்பான்மையான சுற்றுலாப்பயணிகள்
ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா அதிக பங்கைக் கொண்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,348 பேரும், ரஷ்யாவிலிருந்து 13,525 பேரும், ஜெர்மனியிலிருந்து 11,654 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 10,744 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |