சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டம்
பல்வேறு காரணங்களை முன்வைத்து அனைத்து அரச வைத்தியசாலைகள் மாபெரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இப்போராட்டம் எதிர்வரும் 03.08.2023 அன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார வல்லுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் 'ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம்' என சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்தே இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கவுள்ளது.
மேலும், சுகாதாரத் துறை தொடர்பான சில தீர்மானங்களை எடுப்பதற்கு போதுமான கால அவகாசம் இருந்த போதிலும், சுகாதார அதிகாரிகள் அவற்றைத் தீர்க்கத் தவறி விட்டனர்.
அத்துடன், மருந்துகள் தட்டுப்பாடு, மருந்துகளின் தரம் போன்ற பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வியாழக்கிழமை (03.08.2023) வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |