இந்தியாவுக்கு தஞ்சமடைந்த மூன்று இலங்கையர்கள் !

Mannar Sri Lanka India
By Shalini Balachandran Jul 05, 2024 10:32 PM GMT

தலைமன்னாரிலிருந்து  தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ் கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த மூவரும் நேற்றையதினம் (05) காலை தனுஷ் கோடிக்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யோக வள்ளி அவரது பிள்ளைகளான எட்டு வயது சிறுமி அனுஜா மற்றும்  ஐந்து வயதுடைய மிஷால் ஆகியோர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இதையடுத்து, தகவல் அறிந்த கடற் காவல்துறையினர்  தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தியாவுக்கு தஞ்சமடைந்த மூன்று இலங்கையர்கள் ! | Sri Lankan Family Members Take Refuge In India

மேலும், மூவரும் இந்தியா செல்வதற்கு படகு கட்டணமாக இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் விசாரணைக்கு பின்னர் மூன்று பேரும் பொலிஸ் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery