உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுவன்
Sri Lanka
World
By Fathima
இலங்கை மேசைப்பந்தாட்ட வரலாற்றில் 11 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தரவரிசையில் 10 வயதான தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இத்தாலியில் நடைபெற்ற உலக இளையோர் மேசைப்பந்தாட்ட போட்டியில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து இலங்கையின் முதலாவது உலக இளையோர் சம்பியனாக வெற்றிப்பெற்றுள்ளார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அவர் உலகத்தரவரிசையில் உச்ச இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் இதுவரை 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள அவர், உலக இளையோர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.