சீனாவிடம் இருந்து இலங்கை விமானங்கள் கொள்வனவு
இலங்கை விமானப்படை, இரண்டு அதிநவீன லு-12ஐஏ விமானங்களை கொள்வனவு செய்ததன் மூலம் 2017 இல் சீனாவிடம் இருந்து விமானங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்தது.
இதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் சீன தேசிய வானூர்தி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதியன்று உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
இலகுரக போக்குவரத்து விமானம்
லு-12ஐஏ விமானம் குறுகிய நேரத்தில் புறப்படுகை மற்றும் தரையிறக்க வசதிகளை கொண்ட விமானமாகும், இது பல்துறை இலகுரக போக்குவரத்து விமானமாக செயற்;படுகிறது.
இந்த விமானம், 15 பேர் பயணிக்கும் திறன் கொண்டது.
அத்துடன் இலங்கையின் 90 வீத ஓடுபாதைகளில் லு-12ஐஏ விமானங்கள் தரையிறங்குவதற்கான தனித்துவமான திறன்களை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.