நாட்டுக்கு வந்து குவிந்த சுற்றுலாப்பயணிகள்
கடந்த ஜூலை மாதத்தில் மொத்தமாக 200,000 சுற்றுலாப்பயணிகளை தாண்டி இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 6.6% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
அத்துடன் ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து 37,128 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது 18.5% என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,475 பேரும், நெதர்லாந்திலிருந்து 15,556 பேரும், சீனாவிலிருந்து 12,982 பேரும், பிரான்சிலிருந்து 11,059 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,368,288 என பதிவாகியுள்ளது.
இவர்களில் 279,122 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 131,377 பேர் ரஷ்யாவிலிருந்தும், 115,470 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்ததாக இலங்கை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |