நாட்டு மக்களுக்கு நாளை மகிந்த வெளியிடவுள்ள மிக முக்கிய அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளையதினம் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் ரீதியில் தோற்றுவித்த நெருக்கடிகளினால் பாரிய விளைவுகளை எதிர்கொண்டோம். அரசியலமைப்பின் ஊடாக தீர்வு கண்டுள்ளோம். கோட்டாபய இல்லை என்பதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்பதொன்றும் கட்டாயமல்ல, பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.
ராஜபக்சர்களின் மீளெழுச்சியைக் கண்டு எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது நாட்டு மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவரது தலைமைத்துவத்திலான அரசாங்கத்தை கோருகிறார்கள். எமது தேசிய மாநாட்டில் அவர் முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார்.
அரகலய என்று குறிப்பிட்டுக் கொண்டு தோற்றம் பெற்ற போராட்டத்தை அடக்குவதில் கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்தார். அதனால் தான் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போராட்டத்தை சிறந்த முறையில் அடக்கினார் என குறிப்பிட்டுள்ளார்.