சுற்றுலா பயணிகளின் வருகையில் பதிவான அதிகரிப்பு!

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Fathima Jan 24, 2026 05:05 AM GMT
Fathima

Fathima

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 2026ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை

இந்த காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,483 ஆகும் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகையில் பதிவான அதிகரிப்பு! | Sri Lanka Tourists Places

இந்த 22 நாட்களுக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா காணப்படுவதுடன், அந்த எண்ணிக்கை 35,177 ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 19,930 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 19,893 பேரும் மற்றும் ஜேர்மனிலிருந்து 12,822 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.