சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Anura Kumara Dissanayaka Death Weather
By Fathima Nov 28, 2025 05:15 AM GMT
Fathima

Fathima

நாடாளவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இடர்காப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் 56 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் அடைமழை

பலத்த காற்றுடன் தொடரும் அடைமழை காரணமாக மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு | Sri Lanka Today Weather

பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய ஹெலிகொப்டர் பிரிவு ஒன்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, நாடாளவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.