இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைத்த பேராசிரியை

Sri Lanka India
By Fathima Apr 03, 2023 12:07 AM GMT

இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வரை 28 கி.மீ. தூரம் கடலில் நீந்தி கடந்து டெல்லி பேராசிரியை மீனாட்சி பகுஜனா சாதனை படைத்துள்ளார்.

டெல்லி தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றும் இவர் நீச்சலில் அதிக ஆர்வம் கொண்டவர்.

நீச்சலில் அதிக ஆர்வம் 

நீச்சல் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற நிலையில் இலங்கை முதல் தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலில் நீந்தி கடக்க முடிவு செய்துள்ளார்.

இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைத்த பேராசிரியை | Sri Lanka To Dhanushkodi Swimming Past Professor

அதன்படி ஏப்ரல் 1 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து படகில் சென்ற பேராசிரியை, அன்றிரவு 10:00 மணிக்கு இலங்கை தலைமன்னார் கடலில் நீந்த ஆரம்பித்துள்ளார்.

இதன் பின்னர் நேற்று காலை 9:00 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை அடைந்துள்ளார்.