சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு! விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Jenitha
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு, தட்டுப்பாடு நிலவுவதாக சிறு மற்றும் மத்திய தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்கள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விடவும், அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதாக அந்த சங்கத்தின் தலைவர் டீ.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மார்ச் மாத இறுதி வாரத்திலிருந்து மே மாத முதல் வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் கீரி சம்பா அரிசியின் விலை, 25 முதல் 30 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.