பங்களாதேஷிடம் பெற்ற கடன் தொடர்பில் இலங்கை எடுத்துள்ள தீர்மானம்
பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதியை இலங்கை அரசாங்கம் மீள செலுத்தியுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்தில் இலங்கை அரசாங்கம் 200 மில்லியன் டொலர்களை பங்களாதேஷிடம் கடனாக பெற்றுக்கொண்ட நிலையில்,50 மில்லியன் டொலர்களை அரசாங்கம் மீளச்செலுத்தியுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி இந்த கடன் தொகையில் ஒரு தொகுதியை இலங்கை வழங்கியதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மிஸ்பாவுல் ஹக் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி மற்றுமொரு தொகுதி தவணையை இலங்கை செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை மொத்த கடனையும் செலுத்தி தீர்க்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தவணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு பங்களாதேஷ் கடன் வழங்கியிருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக் கடன் தொகையின் முதல் தவணை பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.