இரு குழந்தைகளுடன் இந்தியாவில் தஞ்சமடைந்த ஈழத்து தாய்

Mannar Sri Lanka India
By Raghav Jul 06, 2024 10:02 AM GMT
Raghav

Raghav

தலைமன்னாரிலிருந்து (Talaimannar) தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை (Dhanushkodi) சென்றடைந்துள்ளனர்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளுமே தலைமன்னாரிலிருந்து இன்று (06) காலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த மெரைன் காவல்துறையினர் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மெரைன் காவல்நிலையதடதிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழர் மறுவாழ்வு 

விசாணையில், குறித்த யுவதி விருதுநகர் (Virudhunagar) மாவட்டம் வெம்பக்கோட்டை (Vembakottai) அகதி முகாமில் பிறந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவருக்கு அங்கே திருமணம் முடிந்து கணவருடன் பிரிந்து வாழ்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.

இரு குழந்தைகளுடன் இந்தியாவில் தஞ்சமடைந்த ஈழத்து தாய் | Sri Lanka Refugees Who Came To Dhanushkodi Suffer

இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் (Sri Lanka)  வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தியா (India) வருவதற்கான படகு கட்டணமாக 2லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர் வாக்குமூலமளித்தார். விசாரணைக்கு பின்னர் 03 பேரையும் மெரைன் காவல்துறையினர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்