நாட்டில் இருவர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழப்பு

COVID-19 COVID-19 Vaccine Sri Lanka Death
By Fathima May 14, 2023 12:38 PM GMT
Fathima

Fathima

கடந்த மே 12 ஆம் திகதி மேலும் இருவர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் கோவிட் இறப்பு எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, மேலும் எட்டு புதிய கோவிட் தொற்றாளர்கள் மே 13 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார திணைக்களம் எச்சரிக்கை

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கோவிட் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 672,283 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் கோவிட் வைரஸ் உட்பட பல வைரஸ்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.