கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எட்டப்பட்ட இறுதி இணக்கப்பாடு
5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு உடன்படிக்கையை இலங்கை தரப்பினரும், அதன் இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களும் எட்டியுள்ளனர்.
பிரான்சின் பாரிஸில், இந்த உடன்படிக்கை இன்று (26) எட்டப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை, கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன், அத்தியாவசியமான பொதுச் சேவைகளுக்கு நிதியை ஒதுக்குவதற்கும், அதன் அபிவிருத்தித் தேவைகளுக்கு சலுகை நிதியைப் பெறுவதற்கும் இலங்கையை அனுமதிக்கிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருதரப்பு கடன் மறுசீரமைப்பு
பிரான்ஸின் பாரிஸில் இவ் ஆண்டு பாரிஸ் கிளப், அமர்வு நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவிற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக, இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று, இலங்கைக்கும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் இடையில் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஷெஹான் சேமசிங்க தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |