பிரதமர் பதவி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Ministry of Education Prime minister Sri Lankan political crisis Harini Amarasuriya Tilvin silva
By Fathima Jan 12, 2026 04:57 AM GMT
Fathima

Fathima

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவியில் எப்போதும் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சராகவும், பிரதமராகவும் ஹரிணி அமரசூரிய எவ்வித  தவறும் செய்யவில்லை. எனவே, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரசாரம் அடிப்படையற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, தற்போது சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கும் கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான விடயங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படும், இதன்போது, தவறு எங்கே நடந்தது என்பது கண்டறியப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், பிரதமரை பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றன. ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக இருப்பதால் அவரை குறிவைத்து எதிர்க்கட்சிகள் காய் நகர்த்துகின்றனர். 

அத்துடன், பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி விலகுவதற்கு தயாராகி வருவதாக பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானது என்றும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.