நாட்டிற்கு சிறந்த ஜனாதிபதியாக ரணில் திகழ்வார்: அன்வர் எம் முஸ்தபா சுட்டிக்காட்டு
நாட்டின் இன்றைய சூழ்நிலையில் அரசியல் பயிலுனர்களுக்கு நாட்டை ஆழ கொடுப்பதை விட ரணிலுக்கு கொடுப்பதே பொருத்தமானது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் அன்வர் எம் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கு வாக்களிப்பதை விடவும் கடந்த இரண்டாண்டுகளில் மக்களுக்கு அவர் செய்த சேவைக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக வாக்களிக்க வேண்டியது தார்மீகக் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற "இயலும் ஸ்ரீலங்கா" ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல நாடுகள் முயற்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏனைய வேட்பாளர்களுக்கு செல்வது போலல்லாது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து கொள்ளும் "இயலும் ஸ்ரீலங்கா" பிரச்சார கூட்டத்திற்கு அதிகமதிகம் மக்கள் விருப்பத்துடன் படையெடுத்து செல்கிறார்கள்.
நாட்டை நேசிப்பவர்கள் என்ற வகையில் எமது நாட்டை சிறப்பாக எதிர்காலத்தில் வழிநடத்த கூடியவர் யார் என்று நோக்கினால் அது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே.
புவியியல் ரீதியாக முக்கிய இடத்தில் இலங்கை அமைந்திருப்பதால் தமது தேவைகளை சரிவர செய்து கொள்ள இலங்கை பல நாடுகளுக்கும் தேவையான ஒரு நாடாக அமைந்துள்ளது. அதனால் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது.
அதனால் இலங்கையை சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் இயங்க விடாமல்தடுக்கும் வழிவகைகளை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார்கள்.
சிறந்த ஜனாதிபதி
ஆகவே ரணில் வென்றால் இலங்கைக்கு அவர் சிறந்த ஜனாதிபதியாக திகழ்வார். அதேநேரம் ஏனையவர்கள் வென்றால் ஏனைய நாடுகளுக்கு அவர் சிறந்த ஜனாதிபதியாக திகழ்வார். இதுவே வெளிப்படையான உண்மையாகும்.
முக்கிய அமைச்சுக்களின் அமைச்சராக, பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக, ஜனாதிபதியாக இருந்த அனுபவம் கொண்ட ரணிலுக்கு எந்த சூழ்நிலையில் எப்படி நாட்டை கொண்டு நடத்த வேண்டும் என்ற அனுபவம் இருக்கிறது.
அனுபவமற்றவர்களினால் நாட்டையோ அல்லது ஏனைய அந்நிய நாடுகளுடனான உறவையே சரியாக கொண்டுநடத்த முடியாது. நாட்டின் இன்றை சூழ்நிலை அரசியல் பயிலுனர்களுக்கு நாட்டை ஆழ கொடுக்கும் சூழ்நிலை இல்லை என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |