வாக்களிக்க தயாராகுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
வாக்காளர்கள் செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதன்படி ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் மதகுரு அடையாள அட்டை ஆகியவை இருக்க வேண்டும்.
தற்காலிக அடையாள அட்டை
உங்களிடம் அடையாள அட்டை இல்லை என்றால், உங்களிடம் தற்காலிக அடையாள அட்டை இருக்க வேண்டும். இல்லையெனில், தேர்தல் அலுவலகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டையைப் பெற வேண்டும்.
எனவே செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லை என்றால், உடனடியாக ஏதேனும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |