இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை புகழாரம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வசீகரமானவர் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய வர்ணித்துள்ளார்.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியான, (பிம்ஸ்டெக்) அமைப்பின் வெளியுறவு அமைச்சின் மாநாட்டுக்காக அவர் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.
பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள பாலசூரிய, இந்திய தலைவருடனான தனது முதல் சந்திப்பு இதுவென்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, வசீகரமானவர் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவின் இணைப்பு
தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை, இணைப்புகளில் பின்தங்கியுள்ளதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தெற்காசியாவின் இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என பாலசூரிய கூறியுள்ளார்.
பிம்ஸ்டெக் செயற்கைக்கோள்கள் மற்றும் நனோ செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றங்களும் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான மேம்பட்ட இணைப்பில், இலங்கை கவனம் செலுத்துவதாக கூறிய அவர், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இலங்கையில் காற்றாலை மின்சாரத்தை மேம்படுத்துவதன் மூலம் புதிய வருவாய் வழிகளை உருவாக்க முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |